யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை: வெட்டிக்கொன்ற மனைவி!

Date:

குருநாகல், வெல்லவ பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் கணவனை வாளால் வெட்டி மனைவி கொன்ற சம்பவத்தின் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது யூடியூப் சனலை பிரபல்யப்படுத்துவதற்காக தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை பலவந்தமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதற்கு முயற்சித்த நபரையே. அவரது மனைவி வெட்டி படுகொலை செய்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் உதவியாளராக கடமையாற்றிய வெல்லவ தல்விட்ட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருக்கு 8 வயதான மற்றொரு மகனும் உள்ளார்.

இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சனல் ஒன்றை தொடங்கி அதை பிரபலப்படுத்தும் நோக்கில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்காக தனது ஒரே மகளின் நிர்வாண புகைப்படம் எடுக்க பலமுறை முயற்சி செய்தும், மகள் மற்றும் மனைவி கடும் எதிர்ப்பால் அதை செய்ய முடியவில்லை. இதன்காரணமாக உயிரிழந்தவர் மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளதுடன், அவரை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (3) இரவு அவர் தனது மனைவி மற்றும் மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவை மூடிவிட்டு தனது மகளின் நிர்வாண படங்களை எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மனைவி கதவை வலுக்கட்டாயமாக திறந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் பொல்லு மற்றும் இரும்பு சங்கிலியால் மனைவியை அடித்துள்ளார். இதன்போது, வீட்டிலிருந்த மிளகாய்த்தூளால் கணவனின் கண்களில் வீசியுள்ளர். பின்னர் தனது தாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த வாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்