இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி, கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் மனைவியை கைது செய்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆடை தொழிற்சாலை ஊழியர் ஆவார்.
பலகஹா கிராமத்தில் வசிக்கும் 38 வயதான பிரதீப் குமார் என்பவரே உயிரிழந்தார்.
அவர் ஒரு வேலையில்லாதவர் என்று போலீசார் கூறுகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிய நிலையில் உயிரிழந்த நபர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.




