இலங்கையில் திருமணமானவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெறலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

இலங்கையில் திருமணமான தம்பதிகள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றால், அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள், இலங்கையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குத் திரும்பி வந்து விவாகரத்துக்கான நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தற்போதைய சட்டத்தை இந்தத் தீர்ப்பு மாற்றியது.

இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தனது விவாகரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு திருமணப் பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

UPDATE: நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...

அலி கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய 3 மகன்கள்!

கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர் அலி கமேனியின் மூன்று மகன்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்