Pagetamil
இலங்கை

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அவ்வந்த இடங்களில் நினைவேந்தலிற்கு ஏற்பாடு

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு, அவ்வந்த இடங்களில் நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கூடியிருந்தனர்.

இதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டள்ளது. இவ்விடயம் தொடர்பில் கனகபுரம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உப தலைவர் அருணாசலம் வேழமாலிகிதன் இவ்வாறு தெரிவித்தார்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினுடைய மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27ம் நபள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. சென்ற ஆண்டுகளில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது,மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்குள்ளே மிகுந்த சன நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

சுடர்களை ஏற்றுவதில் மாவீரர் குடும்பங்கள் பங்குகொள்ள முடியாத அளவிற்கு மக்கள் திரழ் அதிகமாக இருந்திருக்கின்றது. அதனை ஒழுங்கு படுத்தும் முகமாக, 2009ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களில் விளக்கேற்ற சேய்ய வேண்டும் என்ற எமது பணிக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை துயிலுமில்ல வளாகம் 2007ம் ஆண்டு வரை மாவீரர்களாக இருந்த மாவீரர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு “அ“ தொடக்கம் “ஈ“ வரையான வலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் நினைவு கற்கள் என்பவற்றினுடைய பெயர் விபரங்கள் குறித்த வலையங்களில் பெயரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே பெற்றோர்கள், உரித்துடையவர்கள் 2 மணித்தியாளங்களாவது முன்பாக வருகை தந்து தங்களது பிள்ளைகளின் பெயர் எந்த வலையங்களிற்குள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றதோ, அந்த வலையங்களிற்குள் சென்று சுடரேற்றுவதற்கு தயாராகுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

2007, 2008, 2009ம் ஆண்டு வரையும் மாவீரர்களானவர்களது பெயர் விபரங்கள் இதுவரையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அத்தைகைய விபரங்கள் தலைமைச் செயலகத்தினால் உத்தியோகபுர்வமாக வெளியிடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவையும் எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்படும்.

இந்த வருடம் அப்படியாக மாவீர்ர்களிற்காக “உ”வலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாவீர்ர்களிற்கான சுடர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அது தவிர, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்களிற்கு செல்ல முடியாதவர்கள் விளக்கேற்றுவதற்காக “ஊ“ வலையம் ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.

ஆகவே, இந்த வலையங்களின் அடிப்படையில், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் நேர காலத்தோடு வருகை தந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக அஞசலி செலுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், துயிலுமில்லத்தின் பிரதான வீதியானது 3 மணியுடன் இடை மறிக்கப்பட்டு, மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாற்று வழியை பயன்படுத்த சாரதிகள் ஒத்துழைக்க வேண்டும். அதேவேளை, துயிலுமில்ல வளாகத்திற்கு இரு பகுதியிலும் வானகனங்களை தரிப்பிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் போன்று இவ்வருடம் சிறு வியாபாரங்கள், ஐஸ்கிறீம் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் துயிலுமில்லத்திலிருந்து 1 கிலோமீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலு்ம, குறித்த நாளினை புனிதப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஒத்தழைக்க வேண்டும் எனவும், மதுபாண விற்பனை நிலையங்களை மூடி ஒத்துழைக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டதுடன், இறைச்சி கடைகள் உள்ளிட்டவற்றையும் மூடி ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலு்ம, துயிலுமில்ல வளாகத்தின் புனிதத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் கலாச்சார உடைகளை அணிந்து அந்த புனிதத்தை பாதுகாக்க ஒத்துழைக்க முன்வர வேண்டும் எனவும், அஞ்சலி செலுத்தப்படும் நேரத்தில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்து அஞ்சலிக்கு ஒத்துழைக்கும் வகையில் இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், டிப்புா சந்தியிலிருந்து துயிலுமில்லத்திற்கான குறுந்தூர சேவைகள் தனியார் பேருந்து சேவையினர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு அமைவாக குறித்த சேவையினையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். வெளி இடங்களில் இருந்து வருகை தரும் மக்கள் டிப்புா சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் ஓய்வெடுத்த பின்னர் குறித்த பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!