உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் அங்கீகாரத்தை அரசியலமைப்பு பேரவை தாமதப்படுத்துவது ஏன் என்பதை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் சில உறுப்பினர்கள் அதன் பணிகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.




