இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யாதவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை FLY DUBAI XZ ஏர்லைன் 579 விமானத்தில் இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு அனுப்பப்பட்ட பின்னர் இறந்த இலங்கையரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
சுஜித்தின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது இன்று காலை 8.37 அளவில் இலங்கையை வந்தடைந்துள்ளது.
உடல் ஒப்படைக்கப்பட்ட போது, சுஜித் யத்வார பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 9 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சடலத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை வென்னப்புவ – துலாவெல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்படும்.