இலங்கை கிரிக்கெட் நிர்வாக விவாதம்: ‘குதிரை போன பின் லாயத்தை மூடி பலனில்லை!’

Date:

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குதல் என்ற தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அந்த அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

“சுதந்திர சதுக்கத்தில் உள்ள கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை எடுக்கப் போவதாக எனக்கு செய்தி வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் இருப்பதால் முகாமையாளர், மேலிடம் ஆலோசனை கேட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து உயர் நீதிமன்றம் கருத்து கேட்கப் போவதாக ஊடகங்களில் பார்த்தோம். இந்த கணக்குகளில் பணமோசடி மற்றும் வெளிப்படையான ஊழல் உள்ளது. இவர்களின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என ஆராய வேண்டும். இவர்களில் ஒருவர் தற்போது நாட்டில் இல்லை. மேலும் காலத்தை தாழ்த்துவதால் பிரச்சினையே உருவாகும். குதிரை போன பிறகு லாயத்தை மூடுவதில் அர்த்தமில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்