இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்களாதேஷ் கப்டன் ஷகிப் அல் ஹசன் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 இல் இருந்து வெளியேறினார்.
6 நவம்பர் 2023 அன்று டெல்லியில் இலங்கைக்கு எதிரான பங்களாதேஷின் லீக் நிலை ஆட்டத்தில் துடுப்பாட்டம் செய்யும் போது ஷகிப் காயம் அடைந்தார்.
நவம்பர் 11 அன்று புனேவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பங்களாதேஷின் கடைசிப் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.
காயம் குறித்த கூடுதல் விவரங்களை தேசிய அணி பிசியோ பைஜெதுல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.
“ஷகிப் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவரது இடது ஆள்காட்டி விரலில் தாக்கப்பட்டார், ஆனால் ஆதரவான டேப்பிங் மற்றும் வலி நிவாரணிகளுடன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்,” என்று அவர் கூறினார்.
“இடது ஆள்கட்டி விரல் மூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது எக்ஸ்ரே பரிசோதனையில் தெரிய வந்தது. அவர் குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்களாகுமென மதிப்பிடப்படுகிறது. அவர் இன்று நாடு திரும்புகிறார்“ என்றார்.