25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைகழகத்தின் 6 மாணவர்கள் கைது!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி பண்ணையாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலையத்துக்கு முன்னால் ஒன்று கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதற்கும் பொது வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைத்த குற்ற்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment