பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டமாவடியில் போராட்டம்

Date:

பலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா கல்குடா கிளையின் வழிகாட்டலில் கல்குடா முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழகையின் பின்னர் கண்டனப் பேரணியினை மேற்கொண்டனர்.

பிரதேசத்தின் நாலா பக்கமும் இருந்து பெருமளவானோர் பங்கு கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தாக்குதலை நிறுத்துமாறு கோரி ஊர்வலமாக ஓட்டமாவடி மணிக் கூட்டு சந்திக்கு வந்து ஒன்று கூடினார்கள்.

அங்கு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு கோரிக்கை அடங்கிய மகஜரும் வாசிக்கப்பட்டது.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்