சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலீஸாருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (30) கலந்துரையாடலில் ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அது பல பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது, அந்த வகையில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் படையினர், போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் கதைத்து முடிவொன்று எடுக்கப்பட்டு செயற்படுத்தி வருகின்ற அதேவளை மக்களுக்கு இலகுவாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் தான் இன்றைய சந்திப்பு,
அந்த வகையில் கொழும்பில் இருக்கக்கூடிய வன திணைக்கள பனிப்பாளர் நாயகம், வர ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் காணொளி வாயிலாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடைய முயற்சியில் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகள் எடுத்திருக்கின்றோம்.
ஆனபடியால் வரும் நாட்களுக்குள் அது நடைமுறைக்கு வரும். சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலீசாருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடி படையினரும் களத்தில் இறங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.