முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் தம்பதியொன்று காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், கொன்று புதைக்கப்பட்ட நிலையில் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதான கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளையும், மருகனையும் காணவில்லையென ஒக்ரோபர் 23ஆம் திகதி தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாராத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த முறைப்பாட்டை செய்தார்.
23 வயதான கீதா ஆகிய தனது மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளியவளையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார் என்றும், இருவரும் கடந்த மாதம் முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
தனது மகள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் கடந்த ஒக்ரோபர் 21ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி நிறுத்தி செய்யப்பட்ட நிலையில் 23ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரின் தொலைபேசிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பl்டதால் சந்தேகம் அடைந்த தாயார் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமைவாக முள்ளியவளை பொலிசார் விசாரணையை மேற்கொண்ட போது கொழும்பு வெல்லம் பிட்டிய பகுதியில் வைத்து, கணவன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குடும்ப தகராற்றினால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் நேற்று (24) மனைவி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்ப்பட்டது.
வாடகைக்கு தங்கியிருந்த வீட்டின் மலசலகூட குழிக்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில், சடலம் மீட்கப்பட்டது.
மலசல கூட குழிக்குஅருகில் சுமார் ஐந்து அடி ஆழத்தில் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பெண்னின் சடலம் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.