எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (21) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் சடலம் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தலையின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
களுத்துறையைச் சேர்ந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர டி சில்வா (42) இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தன்னைத்தானே சுட்டாரா அல்லது யாரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1