விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் போலித் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டதாக போலியான கடிதமொன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை அதில் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்படும் தலைவர்கள், தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தனர். தமிழ் கட்சிகளின் தலைவர்கள் முன்னர் அனுப்பிய கடிதமொன்றின் பகுதியை போலியாக இணைத்து இந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தரப்பிற்கு எதிரான தரப்பொன்றே இந்த கடிதத்தை தயாரித்திருக்கலாமென நம்பப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1