இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், ரெல் அவிவ் நகரிலிருந்து எகிப்துக்கு புறப்படுவதற்கு சற்று முன்னர் விடுக்கப்பட்ட ரொக்கட் எச்சரிக்கையால் தனது விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது தொடர்பில் வெளியான வீடியோக்களில், பென் குரியன் விமான நிலையத்தில் ஜெர்மன் விமானத்தின் அருகே ஜேர்மன் அதிகாரிகள் படுத்திருப்பதைக் காட்டியது. ஜேர்மன் தலைவர் பின்னர் விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு பாதுகாப்பு தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் புதன்கிழமை சந்திப்பதற்காக எகிப்துக்குப் பறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதற்கு முன்னதாக, ஷோல்ஸ் இஸ்ரேலிற்கு வந்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
மேற்கு நாடுகளின் இந்த விதமான இரட்டை மனித உரிமை அணுகுமுறையே காசாவில் பேரழிவை ஏற்படுத்தி வருவதை சவுதி சுட்டிக்காட்டியுள்ளது.
German Chancellor, Olaf Scholz and his Group of Advisors were forced to Evacuate their Aircraft and lay on the Tarmac before being rushed to a Bomb Shelter at Ben Gurion International Airport in Tel Aviv during a Rocket Barrage launched against the City earlier tonight. pic.twitter.com/h06eMEJuge
— OSINTdefender (@sentdefender) October 17, 2023