காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.
காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதல், 2008 க்குப் பிறகு நடந்த ஐந்து போர்களில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் மிக மோசமான தாக்குதலாகும்.
அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், மருத்துவமனை அரங்குகள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் பகுதி முழுவதும் சிதறிக் கிடப்பதைக் காட்டியது.
காசா நகரத்தில் உள்ள பல மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு புகலிடங்களாக மாறியுள்ளன, இஸ்ரேல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரையும் தெற்கு காசா பகுதிக்கு காலி செய்ய உத்தரவிட்டதை அடுத்து, மருத்துவமனைக்குள் தஞ்சமடைந்தால் குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க முடியும் என்று கசாவிலுள்ள அப்பாவி மக்கள் நம்புகிறார்கள்.
تغطية اخبارية| لحظة قصف الاحتلال لمستشفى المعمداني في غزة، ما أدى لاستشهاد المئات. pic.twitter.com/4IRmWIAvpd
— شبكة قدس الإخبارية (@qudsn) October 17, 2023
காசாவில் உள்ள மருத்துவமனையில் மரணங்கள் இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் ஏற்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய போராளி குழுவின் ரொக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டியது.
“இஸ்ரேல் இராணுவ செயல்பாட்டு அமைப்புகளின் பகுப்பாய்வு, காசாவில் பயங்கரவாதிகளால் சரமாரியாக ரொக்கெட்டுகள் வீசப்பட்டதைக் கண்டறிந்தன. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனைக்கு அருகாமையில் சென்றது” என்று இரணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Surveillance camera footage from Netiv Haasara shows a large barrage of rockets being launched from northern Gaza, followed by a massive blast in the Strip, apparently caused by a failed projectile. pic.twitter.com/PdNCbks02r
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) October 17, 2023
“காசாவில் உள்ள மருத்துவமனையைத் தாக்கிய ரொக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததற்கு இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்பதை எங்கள் கைகளில் உள்ள பல ஆதாரங்களில் இருந்து உளவுத்துறை சுட்டிக்காட்டுகிறது.” என்றார்.
எனினும், நீண்டகாலமாக இஸ்ரேல் இந்தவிதமாக பொய்களை கூறுவது வழக்கம். காசாவில் முன்னரும் பல தாக்குதல்களை நடத்தி விட்டு, ஹமாஸில் ரொக்கட் தோல்வியடைந்து தமது பகுதிக்குள்ளேயே விழுந்து வெடித்து விட்டது என கூறுவது வழக்கம்.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு, இஸ்ரேல் இராணுவத்தின் குற்றச்சாட்டுகளை “பொய்” என்று விவரித்தது.
“சியோனிச எதிரி, காசாவில் உள்ள பாப்டிஸ்ட் அரேபிய தேசிய மருத்துவமனை மீது குண்டுவீசி, தனது வழக்கமான பொய்களின் மூலம், பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் மீது குற்றம் சாட்டுவதன் மூலம், அவர் செய்த கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சி செய்கிறது. எனவே எதிரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.” என குறிப்பிட்டது.
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் காசாவில் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தார்.
“நடப்பது இனப்படுகொலை. இந்தப் படுகொலையைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மௌனத்தை இனி ஏற்றுக்கொள்ள முடியாது” என பாலஸ்தீன விடுதலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த படுகொலையைதொடர்ந்து, நான் திகிலடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
“மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள்,” என்று குட்டெரெஸ் எழுதினார். “எனது இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளது.” என்றார்.
ஒக்டோபர் 7 ஆம் தேதி போர் வெடித்ததில் இருந்து காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.