கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, இன்று காலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான ராமையா ஜெயராஜ் சப்புகஸ்கந்த கோனவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1