காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம், மொட்டை தலை மற்றும் மெல்லிய, சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடற்கரையில் மெரூன் நிற ஆடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் படி, சடலம் பிக்கு ஒருவருடையது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1