நாடு முழுவதும் அண்மைய நாட்களில் சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,627 குடும்பங்களைச் சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக வெள்ளத்தினால் 41,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக உள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையின்படி, மோசமான வானிலை காரணமாக 705 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 352 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1