ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்த பிராந்தியமான அப்காசியாவின் கருங்கடல் கடற்கரையில் ஒரு கடற்படை தளத்தை அமைப்பதற்காக ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளதாக அதன் தலைவர் வியாழக்கிழமை (5) அறிவித்தார்.
உக்ரைனிடம் இருந்து மீட்டெடுத்த கிரிமியாவில் (செவாஸ்டோபோல்) ரஷ்ய கடற்படையின் கருங்கடல் பிரிவு தலைமையகம் உள்ளது. இதன் மீது மேற்கு நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அந்த துறைமுகத்திலுள்ள கடற்படை கப்பல்களை ரஷ்யா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. .ந்த பின்னணியிலேயே கருங்கடல் கப்பல் பிரிவிற்காக புதிய தளம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Ochamchira பகுதியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரிவினைவாத பிராந்தியத்தின் தலைவர் அஸ்லான் Bzhania தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம், எதிர்காலத்தில் Ochamchira மாவட்டத்தில் ரஷ்ய கடற்படையின் நிரந்தர தளம் இருக்கும்,” என்று Bzhania மேற்கோள் காட்டியது Izvestiya செய்தித்தாள்.
“இவை அனைத்தும் ரஷ்யா மற்றும் அப்காசியா ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் இதுபோன்ற தொடர்புகள் தொடரும்,” என்று அவர் கூறினார்.
“நான் பேச முடியாத விஷயங்களும் உள்ளன.” என்றார்.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை கிரிமியாவில் சவால்களை எதிர்கொள்கிறது.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் டெலிகிராப் உள்ளிட்ட மேற்கத்திய ஊடகங்கள், கிரிமியன் தீபகற்பத்தில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பரவலாக வெளியிட்டிருந்தன.
பிரிட்டிஷ் உளவுத்துறையை மேற்கோள் காட்டி டெலிகிராப் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில், ரஷ்ய கருங்கடல் கடற்படை உக்ரைன் போரின் தெற்குப் பகுதியில் ஒரே நேரத்தில் வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க போராடுகிறது. செவாஸ்டோபோலுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கடற்படை நடவடிக்கைகள் நோவோரோசிஸ்க்கு இடம்பெயர்கின்றன”. என தெரிவித்தது.
ரஷ்யா மூன்று தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இரண்டு போர்க்கப்பல்களை செவாஸ்டோபோலில் இருந்து ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள மற்ற துறைமுகங்களுக்கு நகர்த்தியுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.