25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
உலகம்

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2ஆம் திகதி முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ்மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக்கப்பட்டது.

2ஆம் நாளான் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதன்படி அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் பெரன்க் க்ரவுஸ், ஸ்வீடனின் லூண்ட்பல்கலைக்கழக பேராசிரியர் ஆனிஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானி களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஒப் சயன்சஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அணுவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளஉதவும் மிக குறுகிய அதிர்வுகொண்ட ஒளியை உருவாக்குவது தொடர்பான ஆய்வில் பியர்லி அகோஸ்டினி, பெரன்க் க்ரவுஸ்,ஆனிஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் எலக்ட்ரான்களின் நகர்வை மிகத் துல்லியமாக கணக்கிட முடியும்.

எலக்ட்ரோன்களை பொறுத்த வரை அட்டோசெகன்ட் பொழுதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அட்டோ செகன்ட் என்பது ஒரு விநாடியில் மிக, மிகச் சிறிய பகுதியாகும். மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வால்அட்டோசெகன்ட் பொழுதில் எலக்ட்ரான்களில் ஏற்படும் மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட முடியும். இதன்மூலம் எலக்ட்ரான்களின் உலகத்தில் நுழைவதற்கான கதவு திறந்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

Leave a Comment