அதிவேகமாக சென்ற கார் ஒன்று வழுக்கி, வீதியின் அருகே இருந்த மண் மேட்டில் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்ஓயா பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த கார், கடும் மழை காரணமாக வழுக்கி அருகில் உள்ள மண்மேட்டில் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது காருக்குள் சாரதி மட்டும் பயணித்தார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
கனமழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் உள்ளதால், அவ்வழிகளில் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1