நாட்டில் அரசியல் வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து கோபம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசியல்வாதிகளும் நேர்மையற்றவர்கள், அவர்கள் இந்த வீட்டுக்குள் நுழைய முடியாது என தனமல்விலவில் உள்ள ஒரு வீட்டின் வெளியே கையால் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது.
தனமல்வில, கியுல் ஆரா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தை (அரசு மற்றும் எதிர்க்கட்சி) பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இந்த அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து வரும் வர்த்தகர்களுக்கு தமது காணிகளை விற்றதைத் தவிர தமது கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.




