மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கிழிந்த ஆடைகளுடன், இரத்தம் வழிந்த நிலையில் தெருவில் உதவி கோரி திரியும் காட்சி அடங்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பகுதியில் அந்தச் சிறுமி பல மணி நேரத்துக்கும் மேலாக சுற்றித் திரிந்த நிலையில், சிறுமி வீடுவீடாக நின்று உதவி கேட்பதும், பலர் பார்த்துவிட்டு பேசாமல் செல்வதும், ஒரு நபர் அச்சிறுமியை விரட்டியடிப்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இறுதியில் சிறுமி ஒரு ஆச்சிரமத்தை அடைந்தார். அங்கிருந்த மதகுரு ஒருவர், சிறுமி வல்லுறவுக்குள்ளாகியுள்ளார் என சந்தேகித்து, உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. அந்தச் சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது அந்தரங்க உறுப்புகள் சேதமடைந்துள்ளதை உறுதி செய்த போலீசார், அதிக ரத்தப்போக்கு காரணமாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். பாதிக்கப்பட்டவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிசிடிவி கமராக்களை சோதனை செய்ததில், சிறுமி சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்தக் காட்சி வைரலான நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
Disturbing visuals from MP's #Ujjain
12-Yr-Old Girl R@ped, Walked Semi-N@ked On Road For 2.5 Hrs, Denied Help By Locals there .
Even after ruling years there bjp can't even provide security to our children .
Vote out this govt now enough is enough .pic.twitter.com/2xLVvPedEF— Surbhi (@SurrbhiM) September 27, 2023
இச்சம்பவம் பற்றி உஜ்ஜைனி நகரின் போலீஸ் எஸ்.பி. சச்சின் சர்மா கூறுகையில், “இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளோம். பொதுமக்களும் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தெரிந்தால் துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் அவர் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எப்படி உஜ்ஜயினிக்கு வந்தார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே தகவல்களைத் திரட்ட முயற்சித்து வருகிறோம். அந்தப் பகுதியில் சென்ற வாகனங்களின் அடையாளங்களையும் திரட்டி வருகிறோம்” என்றார்.