28 C
Jaffna
December 5, 2023
மலையகம்

நுவரெலியா முன்னாள் மேயரின் வீட்டை தாக்கிய சந்தேகநபர்கள் 27 வருடங்களின் பின் விடுதலை

நுவரெலியா முன்னாள் மேயரின் வீட்டை தாக்கி செயலாளரை கொன்று வீடு மற்றும் காரை சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றவாளிகளை விடுதலை செய்ய நுவரெலியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி தெரிவித்தார்.

குற்றம் நடந்த போது முன்னாள் மேயர் நளீன் திலக்க ஹேரத் தனது வீட்டில் இருந்ததாகவும், ஆனால் அவர் வழக்கில் சாட்சியமளிக்க மறுத்துவிட்டதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

குற்றத்துடன் தொடர்புடைய பொருட்களை அரசு ஆய்வாளருக்கு அனுப்ப விசாரணை அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் நீதிபதி கூறினார்.

குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காரில் கிடைத்த கைரேகைகளை கைரேகைப் பதிவாளருக்கு அனுப்பவும் விசாரணை அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.

1996 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில், நுவரெலியாவில், அப்போது நுவரெலியா மேயராக இருந்த நளீன் திலக்க ஹேரத்தின் வீடு, வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டதுடன், அவரது செயலாளராக இருந்த டபிள்யூ.ஆர்.எம்.குணவர்தன கொல்லப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 296/140/316 மற்றும் 410 ஆகிய பிரிவுகளின்படி நுவரெலியா மேல் நீதிமன்றில் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக நான்காவது சாட்சியாக குறிப்பிடப்பட்டிருந்த நுவரெலியா முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான நளீன் திலக்க ஹேரத், சட்டமா அதிபரின் அனுமதியின் பேரில் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!