மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இதற்கு முன்னர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் உண்மைகளை மறைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் ஊடாக இந்த தடை உத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகப் பணியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க தீர்மானித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்