தனது உறவினரின் மகளான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார்.
24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் சேர்த்து, ரூ.25000 இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் 16 வயதுக்குட்பட்ட தனது உறவினரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகவும், தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.




