கம்பளை ஜயமாலாபுர பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி அதிகாலை பேரூந்தில் பயணித்த நபரை தாக்கி வானில் கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தில் சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கடத்த பயன்படுத்திய வான் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் பழங்கால வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி மாவெலயிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் இ.போ.ச பேருந்தை ஜயமலாபுர பகுதியில் நிறுத்திய சிலர், பேருந்தில் பயணித்த ஹேமந்த ராஜபக்ஷ என்ற நபரை கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட நபர் கொழும்பு, ஒருகொடவத்தை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு, அங்கு அவர் விற்ற வாள் குறித்து விசாரித்து, அதனை விற்ற நபரிடம் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான நபர் அவர்களிடமிருந்து தப்பித்து கம்பளை பிரதேசத்திற்கு வந்து சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்ததாக நேற்று (25) தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொலிசார் விசாரணை நடத்தி கொழும்பு பகுதியில் பல்வேறு இடங்களில் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்தனர்.