வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நாளை (செப்.27) முதல் ஒக்ரோபர் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் புதிய முறையை eRL 2.0 நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பின்வரும் மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
27.9.2023 முதல் 2.10.2023 வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்க பயன்படுத்தப்படும் ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 27.9.2023 முதல் 2.10.2023 வரை இருப்பின் அந்த ஆவணங்கள் 6.10.2023 வரை அலுவலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
உமிழ்வுச்சான்றிதழ் (Vehicle Emission test certificate)
தகுதிச்சான்றிதழ் (Vehicle fitness certificate)




