‘இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை… கனடாவில் இந்தியா கொலை செய்யவில்லை’: இந்தியாவுக்கு சேம் சைட் கோலடிக்கிறாரா இலங்கை வெளிவிவகார அமைச்சர்?

Date:

இந்திய- கனடா இராஜதந்திர மோதலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் மூக்கை நுழைத்துள்ளார்.

“தீவிரவாதிகள் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்துள்ளனர். எந்த ஆதாரமும் இல்லாமல், இந்தியாவுக்கு எதிராக அவர்களின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல் முறையல்ல“ என்று சப்ரி குற்றம் சாட்டினார்.

‘அவர்களும் இலங்கைக்கு அவ்வாறே செய்தார்கள். இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பெரும் பொய்யை உருவாக்கியது. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றார்.

இதேவேளை, அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை சமூகவலைத்தளத்தில் வேறுவிதமாக கிண்டலடித்து வருகிறார்கள். இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லையென்பதும், இந்திய ஏஜெண்ட்டுகள் கனடாவில் கொலை செய்யவில்லையென்பதும் “உண்மைகள்“ என கொள்வதா என கிண்டலாக கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்