திருமணமான காதலியை சந்திக்க இரகசியமாக வீடு புகுந்த முன்னாள் காதலன்: திருமணம் செய்து வைத்த கணவன்!

Date:

தனது மனைவிக்கு முன்னாள் காதலனுடன் தொடர்பிருப்பதை அறிந்த கணவன், இருவருக்கும் திருமணம் செய்து  வைத்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த ஜோடி திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இருப்பினும், பீகாரில் உள்ள கோபால்கஞ்சில் வசிக்கும் ஆகாஷ் ஷா என்ற காதலனுடன் அவரது மனைவிக்கு தொடர்பிருப்பதை, கணவர் அறிந்திருக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கணவர் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததை அவதானித்த வீட்டுக்காரர்கள் எச்சரிக்கையாகி, இயவர்களுடன் இணைந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

திருடன் என நினைத்துத்தான் அவர்கள் பிடித்தனர். கணவனின் தாயாரும், உள்ளூர் மக்களும் அந்த நபரை கடுமையாக தாக்கி விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆகாஷ், தானும் அந்தப் பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வருவதாகவும், ஆனால் தான் வேலையில்லாதவர், ஏழை என்பதால் காதலியின் பெற்றோர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், மகளை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர் என்றார்.

காதலிக்கு வெறொருவரை திருமணம் செய்த பின்னரும், அவரை  மறக்கவே முடியவில்லை என்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் ரகசியமாக பேசிக் கொள்வதாகவும் ஆகாஷ் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது தாய்வீட்டிற்கு இரண்டு நாட்கள் சென்றதாகவும், பின்னர் தனது மாமியார் வீட்டிற்குத் திரும்ப மறுத்ததாகவும், அதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் மாமியார் இடையே சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கணவனிடம் திரும்பிச் செல்லும்படி அந்தப் பெண்ணை அவர்கள் வற்புறுத்தினர்.

ஆனால் அந்த பெண் தனது மாமியார் வீட்டில் இல்லையென்பதை அறியாத ஆகாஷ் , வெள்ளிக்கிழமை இரவு தனது காதலியைச் சந்திக்கும் முயற்சியில் பெண்ணின் மாமியார் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது பிடிபட்டபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

காதலித்த பெண்ணின் மாமியார் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகாஷை சரமாரியாக தாக்கினர். இருப்பினும், கணவருக்கு தனது மனைவியின் காதல் விவகாரம் தெரிந்ததும், அவர் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைச் செய்தார்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, மனைவி தனது கணவரின் காலில் விழுந்து தன்னை காதலனுடன் செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சினார். எதிர்பாராத விதமாக, அந்த நபர் சம்மதித்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கணவர் இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று தனது மனைவியையும் அவரது காதலனையும் உள்ளூர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் ஆண் நண்பர் காதலியை தேடி வந்த அதே மோட்டார் சைக்கிளில் அவர்களை அனுப்பி வைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்