27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

‘இந்த தமிழனை கண்டால் அருகிலும் செல்லாதீர்கள்’: பிரித்தானிய பொலிசாரின் அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவின் கிழக்கு லண்டலில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியோடிய தமிழர் தொடர்பில் மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த நபர் வன்முறையில் ஈடுபடக் கூடியவர் என்றும், அவரை நெருங்க வேண்டாமென்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

43 வயதான பாலசங்கர் நாராயணன் என்ற அந்த நபர் செப்டம்பர் 21ம் திகதி மாயமாகியுள்ளார்.

பாலசங்கர் நாராயணன் கடைசியாக வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சட்டையுடன் கருப்பு டிராக்சூட் கால்சட்டையும் கருப்பு பேஸ்பால் தொப்பியும் அணிந்து காணப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதியிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் பாலசங்கர் நாராயணன் காணப்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலசங்கர் நாராயணன் காப்பகத்தில் இருந்து தப்புவது இது முதல் முறையல்ல என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலும், பொலிசார் இவர் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் 2021ல் இவர் ஒருமுறை காப்பகத்தில் இருந்து மாயமாகியுள்ளார். லண்டன் ரயில்களில் இவர் பயணிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார், பொதுமக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் அளிக்கவும் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment