ஐ.நா பொதுச் சபையின் ஓரு நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி, பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு ஏன் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளதுடன், ஊழல் ஆட்சியாளர்களின் தவறுகளை பொருளாதார சுமையாக, சுமக்க முடியாமல் சுமந்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் ஊதாரித்தனமாக செயற்பட்டு தொடர்ந்து, தம் மீது சுமையேற்றுகிறார்கள் என்ற விமர்சனம் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.
ஐ.நா பொதுச்சபை அமர்வுகளிற்காக நியூயோர்க் சென்ற அதிகாரபூர்வ தூதுக்குழுவில் அலி சப்ரியின் மகன் ஏன் அங்கம் வகிக்கிறார் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரச குழு அமெரிக்கா சென்றது. எனினும் இந்த குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் அல்லாத எம்.பி.க்கள் ஏன் சேர்க்கப்பட்டனர் என்று விடை தெரியாத கேள்வி பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அலிசப்ரியின் மகனும் ஜெனீவா சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.