ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுக்கு ஜனாதிபதி சென்ற போது, நாட்டை வங்குரோத்து செய்த ஒரு குழுவை தன்னுடன் அழைத்துச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவினரை மகிழ்விப்பதற்காக இவ்வாறு செயற்படுகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வீணடிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அத்தியாவசிய அதிகாரிகளை அழைத்துச் சென்றாலும் பரவாயில்லை. நாட்டை திவாலாக்கிய நண்பர்கள் குழுவை அழைத்து சென்றுள்ளார். அந்தக் குழுவை மகிழ்விப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்காதீர்கள்“ என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1