Pagetamil
முக்கியச் செய்திகள்

திலீபன் நினைவு வன்முறை வடிவமெடுக்கிறது: கொழும்பிலிருந்து வந்த பொலிஸ்குழு யாழ் நீதிமன்றத்தில் மீள மனுத்தாக்கல்!

தியாகி திலீபன் நினைவு நாள் அனுட்டிப்பு வன்முறையை தூண்டும் அபாயமுள்ளதால் உடனடியாக நினைவு நிகழ்வுகளை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தியாகி திலீபன் நினைவு நிகழ்வை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிசார் நேற்று (19) முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்து, நேற்று (20) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, இன்று கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியில் வந்து, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இதில், தியாகி திலீபன் நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அத்துடன், நேற்று வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர்.

நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவமெடுப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதற்காக நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், பொலிசார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி வினவியபோது, பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலை தடுக்க நினைவு நாள் அனுட்டிப்பை தடை செய்ய வேண்டுமென கோரினர்.

இந்த மனு தொடர்பில் நாளை மதியம் 1.30 மணிக்கு கட்டளை பிறப்பிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

பம்பைமடுவில் நடந்தது என்ன?

வவுனியா பம்பைமடுவில் நேற்று திலீபன் ஊர்தி பயணித்தது. பம்மைமடு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு நடந்தது. மாணவர்கள் அஞ்சலி செலுத்திய போது, சிவில் உடையில் வந்த புலனாய்வாளர்கள் அதை காணொளியாக பதிவு செய்தனர்.

புலனாய்வாளர்கள் காணொளி பதிவு செய்ததால் மாணவர்களுக்கிடையே சலசலப்பு உருவானது.

இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த சட்டத்தரணி ந.காண்டீபன், அந்த நபர்களிடம் சென்று, அவர்கள் யார் என வினவியுள்ளார். தாம் ஊடகத்தை சேர்ந்தவர்கள் என அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடக அடையாள அட்டையை காண்பிக்குமாறு காண்டீபன் கேட்டார். பின்னர் ஒருவர் பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அவரிடமிருந்த காணொளிகளை அழிக்குமாறு முன்னணியினர் வற்புறுத்தியுள்ளனர். அவர் காணொளிகளை அழிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், அழிக்கவில்லை.

இதையடுத்து, முன்னணியினர் அவரது தொலைபேசியை கைப்பற்றி காணொளியை அழித்துள்ளனர்.

தனது கையடக்க தொலைபேசியை பலவந்தமாக பறித்து, காணொளி அழிக்கப்பட்டதாக அந்த சிவில் உடை புலனாய்வாளர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே, இன்ற யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவுக்கு தடைகோரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!