நாளை நியூயோர்க்கில் ரணிலுக்கு எதிரான போராட்டத்துக்கு நாடு கடந்த அரசு அழைப்பு!

Date:

இலங்கையில் நடைபெறும் தொடர் இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக வட அமெரிக்க தமிழ்மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை (21)நியுயோர்க் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில் பேசுவதற்கு வருகைதரும் ரணில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறியவர். எமது உடன் பிறப்புகளின் கொலையில் இவருக்கும் தொடர்பு இருப்பது தீவிர சந்தேகத்தை எழுப்புகிறது.

இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஐனாதிபதி கோத்தபாயா, மகிந்த ராஐபக்ச, இராணுவத் தளபதிகள், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரையம் பாதுகாப்பதற்காக பதவியும் வழங்கி தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார்.

ரணில் பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும் ரணிலை அமெரிக்காவில் விரட்டி அடிப்போம். அம்பலப்படுத்துவோம்.

அமெரிக்கா,கனடாவாழ் தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் உங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றது.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்குமாறும் , தமிழர்களை அடித்து கொல்லுமாறும் ,உத்தரவு பிறப்பித்த ரணில் அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா? தமிழர்களே நியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்கு உண்மையையும் எடுத்துரைப்போம் என நாடு கடந்த அரசு குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்