உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யுவதிகள், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் பாலுறவு கொள்ளும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் ஊடாக பணத்திற்கு விற்பனை செய்து வந்த ஒருவரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ராகம பகுதியிலுள்ள விகாரையொன்றிலிருந்து அவர் கைதானார். அவர் அந்த விகாரையில் பௌத்த பிக்குகளுக்கான ஆடை அணிந்து வசித்து வந்துள்ளார்.
சந்தேகநபரிடம் 7 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபரிடம் மூன்று கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 1500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள், சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக குழுக்களில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கணினி குற்ற புலனாய்வு பிரிவின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவு சமீபத்தில் விசாரணையை தொடங்கியது.
சந்தேக நபர், தான் தொடர்பு கொண்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் பணத்திற்கு காட்சிகளை விற்பனை செய்துள்ளார்.
சந்தேக நபர் சிறுமிகளின் நிர்வாண காட்சிகள் அடங்கிய படத்தொகுப்புக்களை மொத்தமாக விற்பதையும், தடை செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி பரிமாற்ற முறையான கிரிப்டோ கரன்சி பணமாக பணம் வசூலிக்கப்படுவதையும் விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய விசாரணையாளர்கள், சந்தேக நபருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி, சந்தேக நபரின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அவர்கள் புகைப்படங்களைக் கேட்டு, 2000 ரூபாவை கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் மூலம் சந்தேக நபருக்கு அனுப்பியுள்ளனர்.
கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரின் சட்டவிரோதச் செயலை உறுதிப்படுத்தியதுடன், நவீன தொழில்நுட்பத்தினூடாக நீண்ட நேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட இடத்துக்கு விசாரணையாளர்கள் சென்று விசாரணை நடத்தியபோது அது தேவத்தை பகுதியில் உள்ள விகாரை என்பது உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபரை கைது செய்யும் வரை அவர் விகாரையில் வசித்த, காவியுடை அணிந்தவர் என்பது தமக்கு தெரியாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




