பொலிஸ்காரரை விடாது விரட்டிய முன்னாள் காதலிக்கு விளக்கமறியல்!

Date:

பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டிய பெண் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பெட்டிபொல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹிகுராக்கொட – தனயாம வீதியில் வசிக்கும் பெண் ஒருவரை நீதவான் விளக்கமறியலில் வைத்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மதியம் இவர் பொலிஸ் நிலைய அலுவலக அறையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது பெண் ஒருவர் வந்து  திட்டி, தனக்க இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.

அந்தபெண் பிங்கிரிய ~ போவத்த பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு செய்த பொலிஸ் பரிசோதகர் கட்டுநாயக்க பிரதேசத்தில் கடமையாற்றும் வேளையில் அந்தப் பெண்ணுடன் உறவு வைத்திருந்துள்ளார். பின்னர் இந்த பெண்ணுடனான உறவை நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண், பொலிஸ் அதிகாரி பணிபுரியும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தனக்கு நீதி வேண்டுமென தகராற்றில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்