வவுனியா சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம்!

Date:

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்ணம் ரோகிணி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (19) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். இறந்த சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்டபான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும். சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும். இதனை தாழ்மையாக கேட்கின்றேன். எங்களது பிள்ளையின் அங்கம் வேண்டும் எனவும் குறித்த சிறுமியின் அம்மம்மா தெரிவித்துள்ளார்.

சிறுமியின் சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 076 – 6091158 அல்லது 075 – 4986953 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்