25.5 C
Jaffna
December 18, 2024
Pagetamil
கிழக்கு

சந்திவெளி விபத்தில் 2 பேர் பலி

மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று திங்கள்கிழமை மாலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியும், 52 வயதுடைய சிறுமியின் பேரனான முகம்மது ஹீசைன் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரே வாகனத்தைச் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 49 வயதுடைய சிறுமியின் பேர்த்தி காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து 3 பேருடன் கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த வேளை பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ளது.

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் தமது மகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக, பேத்தியுடன் சென்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான செயலமர்வு

east tamil

அம்புலன்ஸ் விபத்து

east tamil

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

east tamil

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

Leave a Comment