ஒருவித தோல் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு காய்ச்சலுடன் தனியார் வைத்தியசாலைகள், யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு கை அகற்றப்பட்ட யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19) மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்தார்.
இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திரு. சுகிர்தன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூத்தினர் உறுதியளித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1