31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

உடலுறவு கொள்ளத் தொடங்கியதும் மிருகத்தை போல மாறிய தனுஷ்க குணதிலக: நீதிமன்றத்தில் பெண்ணின் அதிர்ச்சி சாட்சியம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கியபோது, “ஏதோ மாறிவிட்டது” என்றும், அவர் “விலங்காக மாறினார்” என்றும் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தில் மனம் உடைந்து அழுதுள்ளார்.

தனுஷ்க குணதிலக, அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என்று கூறி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரணையை எதிர்கொள்கிறார்.

அவுஹ்திரேலியாவில் டிண்டர் செயலி மூலம் அறிமுகமான யுவதியுடன், கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி குணதிலக,  உடலுறவு கொள்ளும்போது, பலவந்தப்படுத்தியது மற்றும் திருட்டுத்தனம் எனப்படும் ஆணுறையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழங்கு நடந்து வருகிறது.

இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்தது.

இந்த ஜோடி முதலில் ஓபரா பாரில் சந்தித்தனர். அவர்கள் சந்திக்கும் போது கட்டிப்பிடிப்பது அங்குள்ள சிசிரிவி காட்சிகளில் தெரிகிறது. ஒன்றாக மது அருந்திவிட்டு படகு வழியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற பின்னர், இந்த பாலியல் சம்பவம் நடந்தது.

செவ்வாயன்று ஆடியோவிஷுவல் இணைப்பு மூலம் சாட்சியமளிக்கும் இறுதி தருணங்களில், அந்தப் பெண் நீதிமன்றத்திடம் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார்: “அவர் என்னை மூச்சுத் திணறடிக்கும் போது நான் என் உயிருக்கு பயந்தேன், எனவே அது முடிந்தவரை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்”.

அந்த பெண் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேப்ரியல் ஸ்டீட்மேன் நீதிமன்றத்தில், “ஏதோ மோசமானது” நடந்ததாக அந்த பெண் சம்பவம் நடந்த சில நாட்களில் நண்பருக்கு செய்தி அனுப்பியதாக கூறினார்.

“நான் எல்லா தவறுகளையும் செய்தேன் என்று நீங்கள் என்னிடம் சொல்லப் போகிறீர்கள் … நாங்கள் சந்தித்தபோது அவர் மிகவும் அழகாகத் தெரிந்தார் … நாங்கள் உடலுறவு கொள்ளத் தொடங்கியபோது அவருக்குள் ஏதோ மாறியது. அவர் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தார்” என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்களில் மற்றொரு நண்பருடன் தொலைபேசியில் பேசியபோது, குணதிலக “ஆக்ரோஷமாக” மாறியதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டதையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறினார்.

“அவன் என் மேல் இருந்தான், சில சமயங்களில் என்னால் சுவாசிக்கவே முடியவில்லை… நாங்கள் படுக்கையறைக்குள் சென்றபோது அவன் ஒரு விலங்காகவும் வித்தியாசமான மனிதனாகவும் மாறியது போல் இருந்தது” என்று அந்தப் பெண் தன் தோழியிடம் சொன்னதாக சட்டத்தரணி ஸ்டீட்மேன் கூறினார்.

இதேவேளை, குணதிலக சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முருகன் தங்கராஜ், அந்த பெண்ணிடம் சரமாரியான கேள்விகள் எழுப்பினார்.

திங்களன்று நடந்த வழக்கு விசாரணையில், குணதிலக ஆணுறை பயன்படுத்த வேண்டாம் என்று தன்னை வற்புறுத்த முயன்றதாக அந்த பெண் கூறினார். ஆனால் தங்கராஜ் அப்படி இல்லை என்று வலியுறுத்தினார்.

“அன்று இரவு ஆணுறை அணிய விரும்பவில்லை என்று அவர் ஒருபோதும் கூறவில்லை,” என்று சட்டத்தரணி முருகன் தங்கராஜ் செவ்வாயன்று கூறினார்.

“பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள அவர் உங்களை ஒருபோதும் வற்புறுத்த முயற்சிக்கவில்லை.”

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் பதிலளித்தார்: “அது சரியல்ல”.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பொலிஸ் அறிக்கையில்,  குணதிலகவின் “ஒரு கை மூச்சுத் திணறல்” செய்ததாகவும், மற்றொன்று “படுக்கையில்” இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குணதிலக தனது பிட்டத்தில் அறையத் தொடங்கினார் என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

“அவர் மூச்சுத் திணறும்போது அல்லது உங்கள் பிட்டத்தை அறைந்தபோது அவர் ஆணுறையை அகற்றியிருக்க முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்,” என்று அவர் அந்தப் பெண்ணிடம் முருகன் தங்கராஜ் கூறினார்.

அவர் அந்த பெண்ணை தொடர்ந்து வறுத்தெடுத்தார், ஆணுறையை கழற்ற தனது வாடிக்கையாளருக்கு எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது, ஏனெனில் அவரது அறிக்கையின்படி உடலுறவு “சுமார் 10-15 நிமிடங்கள் தொடர்ந்தது” என்று கூறினார்.

ஆனால்  தான் கீழே பார்த்தபோது தரையில் இருந்த ஆணுறையை அகற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்ததாக அந்த பெண் கூறுகிறார்.

“அவர் ஆணுறையை வீசியதையோ அல்லது வேறு எதையோ நீங்கள் விவரிக்கவில்லையே” என்று முருகன் தங்கராஜ் அந்தப் பெண்ணிடம் கேட்டார்.

“எந்த நேரத்திலும் குணதிலக உங்களுடன் பாதுகாப்பற்ற ஆண்குறி மற்றும் பிறப்புறுப்பு உடலுறவு கொள்ளவில்லை.”

இந்த கூற்று “சரியில்லை” என்று கூறிய பெண், குணதிலக “ஆணுறையை கழற்றி தரையில் வீசியதாக” வலியுறுத்தினார்.

அவர்கள் படகுக்காக காத்திருந்தபோது குணதிலக தன்னை “பலவந்தமாக” முத்தமிட்டதாகவும், மேலும் “அவரது பிட்டங்களை மிகவும் பலமாக அறைந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

அவர்கள் மீண்டும் தனது வீட்டிற்கு வந்தபோது, குணதிலக “அவரை மீண்டும் படுக்கையில் தள்ளுவதற்கு” முன் இரண்டு கிளாஸ் மதுவை ஊற்றியதாகவும், மீண்டும் வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

அந்த பெண் கிரிக்கெட் வீரரை தனது படுக்கையறைக்குள் அழைத்துச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றியது ஏன் என்று தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.

“அவரை படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல நீங்கள் எடுத்த முடிவு, மாலையின் இயற்கையான முன்னேற்றம், இல்லையா?” என்று தங்கராஜ் கேட்டார்.

“பல நாட்கள் ஊர்சுற்றி, கிட்டார் வாசித்து, மது அருந்திய பிறகு, படுக்கையறையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்த பிறகு, உங்கள் இடத்தில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பானங்களுடன், ஓய்வறையில் இருந்து படுக்கையறை வரை ஒரு இயற்கையான இயக்கம் இருந்தது.”

அந்தப் பெண் அதை ஏற்கவில்லை.

அந்த பெண்ணுக்கு தெரியாமல் ஆணுறையை அகற்றினாரா இல்லையா என்பது குறித்து குணதிலக்கவின் மனநிலைதான் விசாரணையில் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

பெண் பாதுகாக்கப்பட்ட உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக திருமதி ஸ்டீட்மேன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி ஹகெட் முன் விசாரணை தொடர்கிறது.

இதையும் படியுங்கள்

கோர விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

யாழ் முன்னாள் எம்.பியொருவர் விரைவில் கைதாவார்: சுமந்திரன் ஆருடம்!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!