சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) கள்ள உறவு காரணமாகவே ஜூலை மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (19) தெரிவித்துள்ளது.
அமைச்சர் சின் (Qin) திடீரென மாயமாகியிருந்தார். பின்னர், அவர் பதவிநீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
தற்போது, அதற்கான காரணம் வெளிப்பட்டுள்ளது.
சீனாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்தபோது, அங்குள்ள பெண்ணொருவருடன் கள்ள உறவு வைத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
கள்ளத் தொடர்பினால் அவருக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கான சீனத் தூதராக இருந்த காலம் முழுவதும் சின் இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியின் உள் விசாரணையில் கண்டறியப்பட்டதாக சீன மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
சின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்குப் பதிலாகத் வாங் யீ (Wang Yi) புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.




