Pagetamil
இலங்கை

பெண் கொடுக்க மறுத்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுவீச்சு… ‘வேற லெவல்’ யாழ்ப்பாண ரௌடிகள்: ‘மைனர் குஞ்சு’ உள்ளிட்ட 3 பேர் கைது!

யாழ்ப்பாணம், கொக்குவிலில் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தி, பெற்றோல் ஊற்றி கொளுத்தி, பொருட்களை அடித்துடைத்து, வீட்டிலிருந்தவர்களை காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குவில். தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

நேற்று (16) அதிகாலை 4.20 மணியளவில் ரௌடிக்குழுவொன்று மோட்டார் சைக்கிளில் வந்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பொருட்களை அடித்துள்ளது. அத்துடன், பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிற்குள் பெற்றோல் ஊற்றி கொளுத்தினர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டுக்குள் பெற்றோல் ஊற்றி கொளுத்தியதில், வீட்டிலிருந்தவர்கள் தீக்காயமடைந்தனர்.

ரௌடிகள் தப்பியோடியதை தொடர்ந்து, வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட்டபடி வெளியே ஓடிவந்ததையடுத்து, அயலவர்கள் இணைந்து அவர்களை வைத்தியசாலைக்க அனுப்பி வைத்தனர்.

வீட்டிலிருந்த 5 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17,18 வயதான மகள்கள் இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரத்தை தொடர்ந்தே இந்த அட்டூழியம் நடந்துள்ளது விசாரணையில் புலப்பட்டது. எனினும், எவ்வாறான காதல் விவகாரம் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

உரும்பிராயை சேர்ந்த சுரேஷ், வாகீசன், ஜெம்மி ஆகிய ரௌடிகள் அடியாட்களுடன் வந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்படி, உரும்பிராயை சேர்ந்த ரௌடியொருவன், பாடசாலை மாணவியான அந்த வீட்டு யுவதியை காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்ததாகவும், தனக்கு மாணவியை திருமணம் செய்து தருமாறு மாணவியின் வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல்களின் அடிப்படையில், உரும்பிராய், ஊரெழு, அச்செழுவை சேர்ந்த 25, 28, 36 வயதானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு காதல் மிரட்டல் விடுத்த ‘மைனர் குஞ்சு’ம் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதையும் படியுங்கள்

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!