புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போயிருந்த ஆணின் சடலம், அழுகிய நிலையில் நேற்று (16) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் (29) என்பவர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் (15) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
தேங்காய் பறிக்கும் தொழிலாளியான காணாமல் போன இளைஞன் போதைக்கு அடிமையானவர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு , பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள தென்னம் காணியொன்றில் இருந்து துர்நார்ற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
காணாமல் போயிருந்த இராசலிங்கம் சுதர்சனே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
தென்னை மரமொன்றின் கீழ் அவரது சடலம் காணப்பட்டது. அருகில் அவரது செருப்புக்கள் காணப்பட்டன. அவரது துவிச்சக்கர வண்டியும் அந்த காணிக்குள் காணப்பட்டது.
அவர் தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியபோது தவறிவிழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.