கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி வீடொன்றில் தனியாக இருந்த 57 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிசிர பிரியந்த குமார என்ற 57 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டவர் மட்டும் இலங்கைக்கு வந்து, புதிய வீடு கட்டி வருகிறார்.
இந்த வீட்டின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்பு சேவையை சேர்ந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களான தந்தை மற்றும் மகன் ஆகியோர் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவரான 33 வயதுடைய நபரே கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1