28.6 C
Jaffna
September 22, 2023
இலங்கை

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்; 5 பேர் காயம்: ஒருதலை காதலன் வெறிச்செயல்?

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (16) அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு தலைக் காதலனாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றில் மீது இன்று அதிகாலை 4.20 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன் ஒருவரும், அவருடன் வந்த ரௌடிகளுமே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், வீட்டுக்குள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

இதில் வீட்டிலிருந்த 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன், அந்த வீட்டிலுள்ள யுவதியில் ஒரு தலைக்காதல் கொண்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர் மறுத்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தியாகி திலீபன் நினைவு: பொலிசாரின் மனுவை 2வது முறையும் நிராகரித்தது யாழ் நீதிமன்றம்!

Pagetamil

தியாகி திலீபன் நினைவுநாளை தடை செய்க: பருத்தித்துறை பொலிசாரின் மனு நிராகரிப்பு!

Pagetamil

ரணிலின் ஐ.நா உரை

Pagetamil

ரணில்- பைடன் சந்திப்பு

Pagetamil

பேருந்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!