ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றதுடன் நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்று போராட்டக்கரார்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலைவர் தின நிகழ்வுக்காக சாய்ந்தமருது ஊருக்கு வருகை தரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் ஆகியோர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், அவர்களது வருகையை கண்டிக்கும் வகையிலான சுலோகங்களையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “வராதே …! வராதே..! ஹக்கீம் வராதே..!“ என கோசமெழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதனால் சாய்ந்தமருது கல்முனை பிரதான வீதியுடான போக்குவரத்துக்கள் சிறிது நேரம் தடைப்பட்டதுடன் போலீசார் நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இப்போராட்டத்தில் பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்