கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

Date:

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார்.

கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிசார் சென்றபோது, கசிப்பு காய்ச்சுபவர்கள் தப்பியோடினர். அவர்கள் குளத்துக்குள் இறங்கி தப்பியோட, பொலிஸ் உத்தியோகத்தர்களும் விரட்டிச் சென்றனர்.

சிறிது நேரத்தின் பின் 2 பொலிசார் திரும்பி வந்தபோதும், ஒருவர் திரும்பி வரவில்லை.

நேற்று இரவு வரை இராணுவம், பொலிசார் அந்த பகுதியில் பெரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று தேடுதல் நடத்தப்பட்டது. இதில் நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டது.

இச் சம்பவத்தில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த லியனகே சத்துரங்க என்வரே இறந்துள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்