26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

ஹரக் கட்டாவை வெளியே அழைத்துச் செல்ல நீதிமன்றம் தடை!

ஹரக் கட்டா என்ற நடுன் சிந்தகவை நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து அழைத்துச் செல்லவோ அல்லது இடம் மாற்றவோ வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ தாக்கல் செய்த மனு விசாரணை தொடர்பிலேயே உத்தரவு பிறப்பித்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவிக்காமல் ஹரக்கட்டாவை இடமாற்ற முடியாதென உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை குறித்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 25 ஆம் திகதி இடம்பெறும்.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீடிப்பதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி ‘ஹரக் கட்டா’ தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

Leave a Comment